செய்திகள்

நாட்டில் அதிகூடிய கொரோனா உயிரிழப்புகள் நேற்று பதிவு

(ராகவ்)

நாட்டில் நேற்று 34 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு இதனை உறுதிப்படுத்தியது.

நாட்டில் ஒரேநாளில் பதிவான அதிகூடிய உயிரிழப்புக்களின் எண்ணிக்கை இதுவாகும்.

அதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்து 15ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் மொத்த கொரோனா உயிரிழப்பு ஆயிரத்தைக் கடந்துள்ள நிலையில், உலக அளவில் கொரோனா தொற்றாளர்களின் உயிரிழப்பு அதிகம் பதிவான நாடுகளின் பட்டியலில் இலங்கை 99ஆவது இடத்தில் பதிவாகியுள்ளது.

Related Articles

Back to top button