செய்திகள்

நாட்டில் இன்றும் மேலும் பல பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன

இன்றைய தினம் மேலும் 16 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, கம்பஹா மாவட்டத்தின் மஹர பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட எடிகெஹெல்கல்ல மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு, கட்டானை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட KC சில்வா கிராம உத்தியோகத்தர் பிரிவு, கதிரான வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவை சேர்ந்த எடபகஹாவத்த கிராமம், கதிரான தெற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவை சேர்ந்த பேஷகர்ம கிராமம், வத்தளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சேதவத்தை கிராம உத்தியோகத்தர் பிரிவை சேர்ந்த மஹபமுனுகம பிரிவு, குன்ஜகஹவத்த கிராம உத்தியோகத்தர் பிரிவை சேர்ந்த 44 ஆவது ஒழுங்கு நில்சிறி கிராம உத்தியோகத்தர் பிரிவை 3 ஆவது மற்றும் 7 ஆவது ஒழுங்கு ஆகியன தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன் அம்பாறை மாவட்டத்தின் தெஹியத்தகண்டிய பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நவமெதகம கிராம உத்தியோகத்தர் பிரிவை சேர்ந்த நவமெதகம பிரிவு, பக்மீதெனிய கிராம உத்தியோகத்தர் பிரிவை சேர்ந்த ரனஹெலகம பிரிவு, சேருபிடிய கிராம உத்தியோகத்தர் பிரிவை சேர்ந்த சேருபிடிய உப பிரிவு ஆகியன தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினபுரி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட, அங்கம்மன 182 கிராம உத்தியோகத்தர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை களுத்துறை மாவட்டத்தின் மொரகஹஹேன பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட, பலன்னொருவ 604 கிராம உத்தியோகத்தர் பிரிவு, கொரலஹிம 604 ஏ கிராம உத்தியோகத்தர் பிரிவு, கும்புக மேற்கு 607 ஏ கிராம உத்தியோகத்தர் பிரிவு, ஹொரணை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட, நர்த்தனகல 606 சி கிராம உத்தியோகத்தர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், மொனராகலை மாவட்டத்தின் மொனராகலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட, போஹிடிய கிராம உத்தியோகத்தர் பிரிவு என்பனவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com