செய்திகள்

நாட்டில் இன்றும் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன

நாட்டில் மேலும் 3 மாவட்டங்களில் 9 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் இன்று காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதற்கமைய யாழ்ப்பாண மாவட்டத்தின் பலாலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, பலாலி வடக்கு கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, கல்மடு கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் மொனராகலை மாவட்டத்தின் செவனகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, கிரிவெவ, செவனகல, பஹிராவ, ஹபரத்தவெல, ஹபருகல, மஹாம, இதிகொலபெலஸ்ஸ ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

This image has an empty alt attribute; its file name is coronavirus-curfew-.jpg

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com