செய்திகள்

நாட்டில் இன்றும் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன

நாட்டில் மேலும் 2 மாவட்டங்களில் 11 கிராம சேவகர் பிரிவுகள் இன்று காலை 6.00 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களை சேர்ந்த 11 கிராம சேவகர் பிரிவுகளே இவ்வாறு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய திருகோணமலை மாவட்டத்தின் திருகோணமலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகராஜ வலவ்வ கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிறைந்துறைச்சேனை கிராம சேவகர் பிரிவின் முதலாம் மற்றும் இரண்டாம் குறுக்கு வீதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி பிரிவு 4, காத்தான்குடி பிரிவு 5 தெற்கு, காத்தான்குடி பிரிவு 6 மேற்கு, புதிய காத்தான்குடி பிரிவு வடக்கு, தெற்கு மற்றும் கிழக்கு ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அத்தோடு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கர்பலா வீதி, ஏ.எல்.எஸ். மாவத்தை, நூரானியா பொது மயான வீதி மற்றும் கடற்கரை வீதி என்பனவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

This image has an empty alt attribute; its file name is coronavirus-curfew-.jpg

Related Articles

Back to top button