செய்திகள்

நாட்டில் இன்றும் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன

நாட்டில் மேலும் 5 மாவட்டங்களில் 10 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் இன்று காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதன்பிரகாரம் பதுளை, களுத்துறை, மன்னார், யாழ்ப்பாணம், இரத்தினபுரி மாவட்டங்களிலேயே 10 கிராம சேவகர் பிரிவுகளே இவ்வாறு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொழும்பு கிரேன்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட 233 ஆம் தோட்டம் மற்றும் மஹவத்த வீதி ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவத்தளபதி குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Back to top button