செய்திகள்

நாட்டில் இன்றும் மேலும் பல பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன

இன்றைய தினம் மேலும் 13 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அதற்கமைய வத்தளை பொலிஸ் அதிகாரப் பிரிவிற்குட்பட்ட, கெரவலபிடிய கிராம உத்தியோகத்தர் பிரிவு, வத்தளை கிராம உத்தியோகத்தர் பிரிவு, ஹேகித்த கிராம உத்தியோகத்தர் பிரிவு, பள்ளியவத்தை கிராம உத்தியோகத்தர் பிரிவு, மஹபாகே பொலிஸ் அதிகாரப் பிரிவிற்குட்பட்ட, கெரங்கபொகுண கல்உடபிட கிராம உத்தியோகத்தர் பிரிவு, கல்உடுபிட கிராம உத்தியோகத்தர், மத்துமகல கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன் களுத்துறை தெற்கு பொலிஸ் அதிகாரப் பிரிவிற்குட்பட்டஇ நாகொடை தெற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவின் விஜித்த மாவத்தை பகுதி, களுத்துறை வடக்கு பொலிஸ் அதிகாரப் பிரிவிற்குட்பட்ட, வித்யாசார கிராம உத்தியோகத்தர் பிரிவின் போசிறிபுர பிரிவு, மஹகஸ்கடுவ வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு, மத்துக பொலிஸ் அதிகாரப் பிரிவிற்குட்பட்ட, யடதொலவத்த மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவின் கொரடுஹேன பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் கொடிகாமம் பொலிஸ் அதிகாரப் பிரிவிற்குட்பட்ட, கொடிகாமம் மத்திய கிராம உத்தியோகத்தர் பிரிவு, கொடிகாமம் வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு ஆகியன தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button