செய்திகள்

நாட்டில் இன்று 4400 க்கும் அதிகமான கொவிட் தொற்றாளர்கள்!

கொரோனா தொற்று உறுதியான மேலும் 1,112 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

முன்னதாக இன்று 3,315 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

அதன்படி இன்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,446 ஆக உயர்வடைந்துள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 398,801ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன்,கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 2,386 பேர் இன்று குணமடைந்தனர்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 346,767 ஆக அதிகரித்துள்ளது.

Related Articles

Back to top button