...
செய்திகள்

நாட்டில் ஒரு வருடத்திற்கு குடும்ப கட்டுப்பாடு தேவை – வைத்தியர்கள் அவசர கோரிக்கை!

இலங்கையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொவிட் நிலைமை காரணமாக, இயலுமானால் கர்ப்பம் தரிப்பதை ஒரு வருடத்திற்கு பிற்போடுமாறு விசேட வைத்திய நிபுணர் டொக்டர் ஹர்ஷ அத்தபத்து கோரிக்கை விடுக்கின்றார்.

சுகாதார அமைச்சின் சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று (08) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

கொவிட் என்பது புதியதொரு நோய் எனவும், அது குறித்து இதுவரை முழுமையான தகவல்கள் கிடையாது எனவும் அவர் கூறுகின்றார்.

கொவிட் நாளுக்கு நாள் வீரியம் அடைந்து, புதிய பிறழ்வுகள் ஏற்பட்டு வருவதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

தாய்மாருக்கு கொவிட் வைரஸினால் பிரச்சினை கிடையாது என சுகாதார தரப்பினர் ஆரம்ப காலத்தில் தெரிவித்திருந்ததை அவர் நினைவூட்டினார்.

எனினும், தற்போது அந்த நிலைமை மாற்றமடைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

கர்ப்பணி தாய்மாருக்கு கொவிட் வைரஸ் தொற்றுமானால், அது அதிவுயர் அபாயகரமான நிலைமையாகவே கருத வேண்டும் என அவர் கூறுகின்றார்.

ஏனெனில், கொவிட் வைரஸ் கர்ப்பணித் தாய்மார்களை தாக்கினால், அது தாய்க்கும், குழந்தைக்கும் ஆபத்தான விடயம் என அவர் குறிப்பிடுகின்றார்.

இதனால், தம்பதியினர் விரும்பினால், குழந்தை பெற்றெடுப்பதை, ஒரு வருடத்திற்கு பிற்போடுவதற்கு சிந்திக்குமாறு விசேட வைத்திய நிபுணர் டொக்டர் ஹர்ஷ அத்தபத்து கோரிக்கை விடுக்கின்றார்.

ஒரு வருடத்திற்கு குடும்ப கட்டுப்பாட்டு திட்டமொன்றை செய்துக்கொள்ளுமாறு டொக்டர் ஹர்ஷ அத்தபத்து கோருகின்றார்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen