செய்திகள்

நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை ஐயாயிரத்தை கடந்தது.

நாட்டில் மேலும் 145 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இராணுவத்தளபதி சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் 48 பேர் மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில்
பணிபுரிபவர்கள் எனவும் ஏனைய 97 பேரும் குறித்த தொழிலாளர்களுடன் நெருங்கிய
தொடர்பில் இருந்தவர்கள் எனவும் அவர் கூறினார்.

இதன்படி, இதுவரை மினுவங்கொட கொவிட்-19 தொற்று கொத்தணியில் பதிவான மொத்த கொரோனா
தொற்றாளர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 591ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், இதுவரை நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களின்
மொத்த எண்ணிக்கை ஐயாயிரத்து 38 ஆக பதிவாகியுள்ளது.

Related Articles

Back to top button