செய்திகள்

நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 400 ஐ தாண்டியது..

நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 400 ஐ தாண்டியுள்ளது.

நேற்று ஆறு பேரின் கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டதையடுத்து, தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 403 ஆக அதிகரித்துள்ளது.

வத்தளை, ஹுன்னஸ்கிரிய, நுகேகொட, ஹங்வெல்ல,பல்லேதலவின்ன, திவுலன்கடவல ஆகிய பகுதிகளை சேர்ந்த ஆறு பேரின் கொரோனா மரணங்கள் நேற்று உறுதி செய்யப்பட்டன.

இதேவேளை, 774 பேருக்கு நேற்று கொவிட் -19 தொற்று உறுதி செய்யப்பட்டது.

அதற்கமைய, நாட்டில் கொவிட் -19 தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 76 ஆயிரத்து 428 ஆக அதிகரித்துள்ளது.

தொற்றுக்குள்ளானோரில் 69 ஆயிரத்து 411 பேர் குணமடைந்துள்ளதுடன், ஆறாயிரத்து 614 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com