செய்திகள்

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 70 ஆயிரத்தைக் கடந்தது..

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 70 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

நேற்று 878 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 70 ஆயிரத்து 235 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் 64 ஆயிரத்து 141 பேர் இதுவரை தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.

இதனிடையே, மேலும் 09 கொரேனா மரணங்கள் நேற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

இதற்கிணங்க நாட்டில் பதிவாகியுள்ள கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 365 ஆக அதிகரித்துள்ளது.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com