செய்திகள்

நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 370 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் நேற்றைய தினம் 05 கொரோனா மரணங்கள்..

நேற்றைய தினம் 5 கொரோனா மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டன.

இதனிடையே நாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்தும் அதிகரித்துச் செல்கின்றது.

நேற்று மாத்திரம் 975 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளங் காணப்பட்டனர்.

இவர்களில் 971 பேர் பேலியகொட கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் எனவும் ஏனைய நால்வரும் சிறைச்சாலைகளுடன் தொடர்புடையவர்கள் எனவும் அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதன்பிரகாரம் நாட்டில் கொரோனா தொற்றுடன் அடையாளங் காணப்பட்டோரின் எண்ணிக்கை 71 ஆயிரத்து 211 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 65 ஆயிரத்து 53 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதுடன், 5 ஆயிரத்து 788 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com