செய்திகள்

நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 500 ஐ கடந்தது.

மேலும் 5 கொரோனா மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று உறுதிப்படுத்தப்பட்டன.

பல்லேகெலே பகுதியைச் சேர்ந்த 74 வயதான ஆணொருவரும், நுகேகொட பகுதியைச் சேர்ந்த 82 வயதான ஆணொருவரும் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் பரவர்தனஓய பகுதியைச் சேர்ந்த 72 வயதான ஆணொருவரும், மாத்தறையைச் சேர்ந்த பெண்ணொருவரும், கன்னத்தொட்ட பகுதியைச் சேர்ந்த 67 வயதான ஆணொருவரும் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதனடிப்படையில் நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 502 ஆக அதிகரித்துள்ளது.

இதனிடையே, கொவிட் 19 தொற்றுக்குள்ளான 337 பேர் இன்று அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் 321 பேர் பேலியகொட கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் எனவும்,16 பேர் சிறைச்சாலை கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்பிரகாரம் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 85 ஆயிரத்து 695 ஆக அதிகரித்துள்ளது.

Related Articles

Back to top button
image download