செய்திகள்

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றின் தற்போதைய நிலவரம் என்ன?

மேலும் 19 மரணங்கள் பதிவு : 11 ஆண்கள், 8 பெண்கள்

வயதுகள்: 63, 75, 60, 86, 54, 72, 72, 53, 68, 45, 68, 82, 50, 65, 80, 65, 74, 75, 76

இடங்கள்: சுனந்தபுர, இளவாலை, கோன்கஹவெல, இரத்மலானை, தெஹியத்தகண்டி, பதுளை, வாதுவை, கொழும்பு 03, ரத்தொலுகம, ராகமை, வெலிக்கடை சிறை, பொத்தல,அலபலாதெனிய, பொத்தல, அங்குலுகஹ, ஹிக்கடுவை, அங்குலுகஹ, நுவரெலியா, அநுராதபுரம்

நாட்டில் மேலும் 19 கொரோனா மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று உறுதிப்படுத்தப்பட்டன. இதனடிப்படையில் நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 764 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் மேலும் ஆயிரத்து 914 கொரோனா நோயாளர்கள் நேற்று அடையாளங்காணப்பட்டுள்ளனர். இதனடிப்படையில் நாட்டில் இதுவரை பதிவான கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 21 ஆயிரத்து 338 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் ஒரு இலட்சத்து ஆயிரத்து 763 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதுடன், 18 ஆயிரத்து 811 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Covid 19 Death 07.05.2021
Covid 19 Death 07.05.2021 01

Related Articles

Back to top button