...
செய்திகள்

நாட்டில் -கொவிட்டை கட்டுப்படுத்த மொல்னுபிரவீர் பொதிமருந்து மாத்திரையை பயன்படுத்த அனுமதி..

இலங்கையில் கொவிட் வைரஸைக் கட்டுப்படுத்த மொல்னுபிரவீர் பொதிமருந்து மாத்திரையை ( Capsule ) பயன்படுத்துவதற்கு கொவிட் 19 தொடர்பான இலங்கை தொழில்நுட்பக் குழு அனுமதி வழங்கியுள்ளதாக மருந்துப் பொருட்கள் உற்பத்திஇ வழங்கல்கள் மற்றும் ஒழுங்குமுறை இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

நேற்றைய (15) தினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்…….

மொல்னுபிரவீர என்ற  பொதிமருந்து மாத்திரையை முதற்தடவையாக  வாய்வழியாக உட்கொள்ள முடியுமான மேற்கத்திய மருந்தாக அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த மருந்தை இலங்கையில் பயன்படுத்த வேண்டுமா? அதை எந்தெந்த குழுக்களுக்கு பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து, கொவிட் 19 தொடர்பான இலங்கை தொழில்நுட்பக் குழுவின் பரிந்துரையைக் கோரி, அக்டோபர் 11ஆம் திகதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பினேன். அந்த பரிந்துரை தற்போது கிடைத்துள்ளது. இதன்படி, கொவிட் 19 தொடர்பான இலங்கை தொழில்நுட்பக் குழு, மொல்னுபிரவீர் என்ற மருந்தை இலங்கையில் பயன்படுத்த தகுதியாளனது என்று பரிந்துரைத்துள்ளது.

தற்போதைய பரிந்துரைகளின்படி, கொவிட் 19 நோயின் இலகுவான மற்றும் நடுத்தர அறிகுறிகளைக் கொண்டவர்களுக்கு இந்த பொதிமருந்து மாத்திரை  வழங்கப்பட வேண்டும் என்றும், ஒரு நாளைக்கு இரண்டு முறை (800mg Cpsule)  5 நாட்களுக்கு பயன்படுத்த வேண்டும் .என்று குறித்த மருந்து தொடர்பாக ஆய்வு செய்த ஆய்வுக் குழு தெரிவித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களம்

Related Articles

Back to top button


Thubinail image
Screen