செய்திகள்

நாட்டில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு.

நாட்டில் மேலும் 23 பேருக்கு கொவிட் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதார
அமைச்சு தெரிவித்துள்ளது.

சேனாபுர புனர்வாழ்வு நிலையத்தை சேர்ந்த 17 பேருக்கும் கட்டாரிலிருந்து நாடு
திரும்பிய ஐவருக்கும் கொவிட் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

தற்போது வெளியிடப்பட்ட தகவல்களின் பிரகாரம் சவுதிஅரேபியாவிலிருந்து வருகை தந்த
ஒருவருக்கும் கொவிட் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 2805 ஆக அதிகரித்துள்ளது.

கொவிட் தொற்றுக்குள்ளான நிலையில் இதுவரையில் 2121 பேர் குணமடைந்துள்ளனர்.

672 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் கொவிட்
தொற்றுக்குள்ளான 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related Articles

Back to top button