செய்திகள்

நாட்டில் டெங்கு நோய் பரவும் அபாயம் : சுகாதார துறையினர் எச்சரிக்கை.!

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் ஒன்பதாயிரத்து 169 பேர் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளனர். இம்மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் 397 டெங்கு நோயாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

கொழும்பு மாவட்டத்தில் கடந்த 05 நாட்களில் 155 பேர் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளதுடன் அங்கு வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் ஆயிரத்து 816 பேர் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இவ்வருடமும் மட்டக்களப்பு மாவட்டத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

அங்கு இதுவரை இரண்டாயிரத்து தொள்ளாயிரத்து 60 டெங்கு நோயாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.

இவற்றை தவிர கம்பஹா மாவட்டத்தில் 777 பேரும் களுத்துறை மாவட்டத்தில் 516 பேரும் கண்டி மாவட்டத்தில் 329 பேரும் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளனர்.

Related Articles

Back to top button