செய்திகள்

நாட்டில் தேங்காயின் விலையில் திடீர் மாற்றம்

நாட்டின் பல இடங்களிலும் உள்ள கடைகளில் தேங்காய் ஒன்று 90 ரூபா தொடக்கம் 100 ரூபா வரை விற்பனை செய்யப்படுகின்றன.

தபுள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் நேற்று மாலை(03) தேங்காய் ஒன்றின் விலை 90 ரூபா தொடக்கம் 100 ரூபா வரை காணப்பட்டடுள்ளது.

கடந்த ஒக்டோபர் மாதத்தில் ஒரு தேங்காயை 65 ரூபாவிற்கு பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டடுள்ளது

லொறிகளின் மூலமும் , சதோச உள்ளிட்ட இடங்களிலும் தேங்காயை குறைந்த விலையில் பெற்றுக்கொள்ள முடியும் என தெங்கு செய்கை சபை தெரிவித்துள்ளது.

ஆனாலும் இதுவரையில் அவை சரியான முறையில் மக்களுக்கு கிடைக்கப்பெறவில்லை என மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button