Breaking Newsசெய்திகள்

நாட்டில் நாளை காலை மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலுக்கு

நாளை காலை 5 மணி முதல் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட உள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, கொழும்பு மாவட்டத்தின் பிலியந்தல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நிவன்திடிய மற்றும் மம்பே கிழக்கு கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்படவுள்ளன. அத்துடன் மஹரகம பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட அரவ்வல மேற்கு கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தப்படவுள்ளன. மேலும் காலி மாவட்டத்தின் ஹபராதுவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கொக்கல 1, கொக்கல 2, மீகஹகொட, மலியகொட மற்றும் பியதிகம மேற்கு கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button