செய்திகள்

நாட்டில் நேற்று பதிவான 50 மரணங்களின் விபரம் இதோ.!

இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 50 மரணங்கள் நேற்று (14) பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் இலங்கையில் ஏற்கனவே 3,611 கொரோனா மரணங்கள் பதிவானதாக அறிவிக்கப்படட்ட நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 50 மரணங்களுடன், இலங்கையில் இதுவரை 3,661 கொவிட்-19 தொடர்பான மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு மரணமடைந்த 50 பேரில், 29 பேர் ஆண்கள், 21 பேர் பெண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இன்றைய தினம் தொற்றுறுதியானோரின் எண்ணிக்கை 967 ஆக பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button