Breaking Newsசெய்திகள்

நாட்டில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில்..

மொனறாகலை, அம்பாறை மற்றும் மாத்தளை மாவட்டங்களில் சில கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கொவிட் 19 பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவர், இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வர் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:

மொனறாகலை, அம்பாறை மற்றும் மாத்தளை மாவட்டங்களில் சில கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் முடக்கப்பட்டுள்ளன.

மொனறாகலை, அம்பாறை மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களில் சில கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் இன்று காலை 06.00 மணி தொடக்கம் முடக்கப்பட்டுள்ளதாக கொவிட் 19 பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவர், இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் அறிவித்துள்ளார்.

மொனறாகலை மாவட்டம்

வெல்லவாய பொலிஸ் பிரிவில்
• வெல்லவாய நகர் கிராம உத்தியோகத்தர் பிரிவு
• வெஹெரயாய கிராம உத்தியோகத்தர் பிரிவு
• கொட்டம்கம்பொக்க கிராம உத்தியோகத்தர் பிரிவு

புத்தல பொலிஸ் பிரிவில்
• ரஹதன்கம கிராம உத்தியோகத்தர் பிரிவு

அம்பாறை மாவட்டம்

உகன பொலிஸ் பிரிவில்
• குமாரிகம கிராம உத்தியோகத்தர் பிரிவு

மாத்தளை மாவட்டம்

நாஉல பொலிஸ் பிரிவில்
• அலுகொல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவு

அரசாங்க தகவல் திணைக்களம்

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com