Breaking Newsசெய்திகள்

நாட்டில் மேலும் சில பகுதிகள் இன்று இரவு 8 மணி முதல் தனிமைப்படுத்தலில்…

இன்று (26) இரவு 8 மணி முதல் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட உள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, கம்பஹா மாவட்டத்தின் பொல்ஹேன ஹீரலுகெதர மற்றும் களுஅக்கல ஆகிய கிராம சேவகர் பிரிவுகளும் மினுவங்கொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அஸ்வென்னவத்த கிழக்கு கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்படவுள்ளது.

அத்துடன் களுத்துறை மாவட்டத்தின் மீகஹதென்ன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மிரிஸ்வத்த, பெலவத்த வடக்கு, பெலவத்த கிழக்கு ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.

மேலும் திருகோணமலை மாவட்டத்தின் திருகோணமலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பூம்புகார் கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தபடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், காலி மாவட்டத்தின் ரத்கம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இரு கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்படவுள்ளது. அதற்கமைய, அம்மாவட்டத்தின் இம்புல்கொட மற்றும் கட்டுதம்பே ஆகிய இரு கிராம சேவகர் பிரிவுகளும் இன்று இரவு 8 மணிமுதல் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக மேலும் தெரிவித்துள்ளார்.

குறித்த பகுதிகளில் கொரோனா தொற்றாளர்கள் அதிகமாக அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்தே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக இராணுவத்தளபதி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தம்புள்ள பொருளாதர மத்திய நிலையம் இரு வாரங்களுக்கு தனிமைப்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com