நாட்டில் மேலும் 05 கொரோனா மரணங்கள் நேற்று பதிவாகின..

uthavum karangal

நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்த மேலும் ஐந்து பேரின் மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

கொழும்பு -12,13, நுகேகொட, மினுவங்கொட, துனகஹ ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களின் கொரோனா மரணங்களே உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

உயிரிழந்தவர்களில் மூன்று பேர் பெண்களாவர்.

அதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 450 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 490 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்களில் மூன்று பேர் சிறைச்சாலைகள் கொத்தணியுடனும், ஏனையவர்கள் பேலியகொட கொத்தணியுடனும் தொடர்புடையவர்களாவர்.

அதற்கமைய நாட்டில் இதுவரை எண்பதாயிரத்து 517 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 75 ஆயிரத்து 110 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர்.

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் நான்காயிரத்து 957 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்