செய்திகள்

நாட்டில் மேலும் 06 கொவிட் மரணங்கள்..

நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 409 ஆக அதிகரித்துள்ளது.

நேற்றைய தினம் (16/02) 06 கொவிட் மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதி செய்யப்பட்டன.

பாணந்துறையைச்சேர்ந்த, 74 வயதான ஆண் ஒருவரும், விலஓயா பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதான ஆண் ஒருவரும், பிலியந்தலையைச் சேர்ந்த 48 வயதான ஆணொருவரும்,கொச்சிக்கடை பிரதேசத்தைச் சேர்ந்த 77 வயதான ஆணொருவரும், கொவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

இதனை தவிர, அம்பலாங்கொடையைச் சேர்ந்த 65 வயதான ஆணொருவரும், நைனாமடு பிரதேசத்தைச் சேர்ந்த 62 வயதான ஆணொருவரும் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, கொரோனா தொற்றுக்குள்ளான 756 பேர் நேற்று அடையாளங் காணப்பட்டனர்.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 77ஆயிரத்து 184 ஆக பதிவாகியுள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து மேலும் ஆயிரத்து 18 பேர் நேற்று குணமடைந்தனர்.

இதன்பிரகாரம் கொவிட் 19 தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 70 ஆயிரத்து 429 ஆக அதிகரித்துள்ளது.

தொற்றுக்குள்ளானோரில் 6 ஆயிரத்து 346 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

Related Articles

Back to top button