செய்திகள்

நாட்டில் மேலும் 08 கொரோனா மரணங்கள் நேற்று உறுதிப்படுத்தப்பட்டன..

நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 264 ஆக அதிகரித்துள்ளது. நேற்றைய (17) தினமும் 08 கொரோனா மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டன.

கொலன்னாவையைச் சேர்ந்த 63 வயதான பெண்ணொருவர், பொரளையைச் சேர்ந்த 75 வயதான ஒருவர், உடபுஸ்ஸல்லாவையைச் சேர்ந்த 27 வயதான ஒருவர், கேகாலையைச் சேர்ந்த 87 வயதான ஆணொருவர், தெஹிவளையைச் சேர்ந்த 72 வயதான ஒருவர், பொலன்னறுவையைச் சேர்ந்த 66 வயதான ஆணொருவர், கொழும்பு 08 ஐச் சேர்ந்த 83 வயதான ஒருவர் மற்றும் உடுதும்பர பகுதியைச் சேர்ந்த 75 வயதுடைய ஆண் ஆகிய 8 பேரே உயிரிழந்துள்ளனர்.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 264 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் நேற்று 749 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவர்களில் 747 பேர் பேலியகொட கொத்தணியைச் சேர்ந்தவர்களெனவும், இருவர் சிறைச்சாலைகள் கொத்தணியைச் சேர்ந்தவர்களெனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அதன்பிரகாரம் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 53 ஆயிரத்து 62 ஆக அதிகரித்துள்ளது.

45 ஆயிரத்து 171 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், ஏழாயிரத்து 627 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com