செய்திகள்

நாட்டில் மேலும் 2 ஆயிரத்துக்கும் ​மேற்பட்டோருக்கு கொரோனா

நாட்டில் மேலும் 2, 637 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா இதனை உறுதிப்படுத்தினார்.

தொற்றுடன் அடையாளங் காணப்பட்ட அனைவரும் புதுவருட கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் தெரிவித்தார். அதற்கமைய நாட்டில் இதுவரையில் 2 இலட்சத்து 10 ஆயிரத்து 516 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 2,214 பேர் இன்று பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கமைய இதுவரை கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 78 ஆயிரத்து 259 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் இவர்களில் 1,789 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

This image has an empty alt attribute; its file name is covid-srilanka.jpg

Related Articles

Back to top button