செய்திகள்

நாட்டில் மேலும் 39 கொரோனா மரணங்கள்..

நாட்டில் மேலும் 39 கொரோனா மரணங்கள் நேற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

கடந்த மாதம் 17 ஆம் திகதி முதல் நேற்று முன்தினம் வரை நிகழ்ந்த மரணங்களே கொரோனா மரணங்களாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

நேற்று உறுப்படுத்தப்பட்ட கொரோனா மரணங்களில் 19 பெண்களும் அடங்குகின்றனர்.

வத்தளை, மொரட்டுவ, யாழ்ப்பாணம், வவுனியா, திருகோணமலை,காத்தான்குடி 2, காத்தான்குடி, நாவலப்பிட்டி, ஹற்றன், மஸ்கெலியா, வட்டவளை, பொகவந்தலாவ உள்ளிட்ட பகுதிகளில் இந்த மரணங்கள் பதிவாகியுள்ளன.

இதனடிப்படையில் நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை ஆயிரத்து 566 ஆக அதிகரித்துள்ளது.

கொவிட் -19 தொற்றுக்குள்ளான மூவாயிரத்து 306 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டனர்.

கம்பஹா மாவட்டத்திலேயே அதிக கொரோனா நோயாளர்கள் தொற்றுடன் அடையாளங்காணப்பட்டுள்ளனர்.

அதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 92 ஆயிரத்து 547 ஆக அதிகரித்துள்ளது.

அவர்களில் 31 ஆயிரத்து 833 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரில் ஒரு இலட்சத்து 60 ஆயிரத்து 714 பேர் குணமடைந்துள்ளனர்.

ஆயிரத்து 527 கொரோனா நோயாளர்கள் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com