செய்திகள்

நாட்டில் மேலும் 41 கொவிட் மரணங்கள் பதிவு.

இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 41 மரணங்கள் நேற்று (15) பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் இலங்கையில் ஏற்கனவே 3,661 கொரோனா மரணங்கள் பதிவானதாக அறிவிக்கப்படட்ட நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 41 மரணங்களுடன், இலங்கையில் இதுவரை 3,702 கொவிட்-19 தொடர்பான மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு மரணமடைந்த 41 பேரில், 23 பேர் ஆண்கள், 18 பேர் பெண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதே

இதேவேளை இன்றைய தினம் புதிதாக கொவிட் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டோரின் எண்ணிக்கை 1446 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button