செய்திகள்

நாட்டில் மேலும் 5 கொரோனா மரணங்கள் பதிவு.

நாட்டில் மேலும் 5 கொரோனா மரணங்கள் நேற்று (10/2) உறுதிப்படுத்தப்பட்டன.

இதனடிப்படையில், கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 375 ஆக
அதிகரித்துள்ளது.

இதனிடையே, நேற்று 955
பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அனைவரும் பேலியகொட கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம்
தெரிவித்துள்ளது.

இதன்பிரகாரம் நாட்டில் கொவிட் 19 தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 72
ஆயிரத்து 174 ஆக அதிகரித்துள்ளது.

65 ஆயிரத்து 644 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ள நிலையில், 6160 பேர்
சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com