செய்திகள்

நாட்டில் மேலும் 543 கோவிட் தொற்றாளர்கள்..

இலங்கையில் இன்றைய தினம் (11) காலை வரையிலும் கொவிட் – 19 வைரஸ் தொற்றுக்குள்ளான 543 பேர் அடையாளம் காணப்பட்டிருப்பதாக கொவிட் – 19 வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இவர்களுள், வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வருகை தந்த இலங்கையர் 7 பேரும், ஏனைய 536 பேரும் நாட்டிற்குள் தொற்றுக்குள்ளானவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அடையாளம் காணப்பட்டவர்களில் அதிகமானோர் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்த 217 பேர்களாவர் என்பதுடன், கம்பஹா மாவட்டத்தில் 85 பேரும், இரத்தினபுரி மாவட்டத்தில் 40 பேரும், ஏனைய மாவட்டங்களிலிருந்து 194 பேரும் தொற்றுக்குள்ளானவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com