செய்திகள்

நாட்டில் 14 முக்கிய மருந்துகள் உள்ளன – கெஹலிய ரம்புக்வெல்ல

நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக பயன்படுத்தப்படும் 14 முக்கிய மருந்துகளும் நாட்டில் உள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், விசர்நாய் தடுப்பு மருந்திற்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும், தட்டுப்பாடு உடனடியாக நிவர்த்தி செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.சுகாதார அமைச்சின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட மருந்துகளுக்கு பாரிய தட்டுப்பாடு இல்லை.

664 அத்தியாவசிய மருந்துகளில் 49 மருந்துகளுக்கு குறிப்பிட்ட தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

எனினும் மாற்று மருந்துகள் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மருத்துவமனைகள் இன்னும் அத்தியாவசிய மருந்துகளுக்கு பற்றாக்குறை இல்லாமல் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் திறன் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அனைத்து மருத்துவ குழுக்களும் தன்னார்வத்துடன் ஒன்றிணைந்து தற்போதைய மருத்துவ நெருக்கடிக்கு மத்தியில் முன்னேறுவதற்கான வழிகள் குறித்து ஆலோசனைகளை வழங்கி வருவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Related Articles

Back to top button