செய்திகள்

நாட்டை அச்சுறுத்தும் டெல்டா வைரஸ்.!

எதிர்வரும் 8 வாரங்களுக்குள் இலங்கையின் பிரதான கொவிட் வைரஸ் வகையாக டெல்டா வகை வைரஸ் மாறலாம் என வைத்தியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

டெல்டா வைரஸ் வகை இதற்கு முன்னர் காணப்பட்ட வைரஸ் வகையிலும் வீரியம்கொண்டதாகும். எழுந்தமானமாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் இந்த தொற்று தொடர்பில் இலங்கையில் இதுவரை ஜவர் அடையாளங் காணப்பட்டுள்ளனர். இதனால் இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் மேலும் இருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுகிறது.

பயணக்கட்டுப்பாட்டில் தளர்வு ஏற்படுத்தப்பட்ட போதிலும் மக்கள் சரியான முறையில் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும். அவ்வாறு சுகாதார விதிமுறைகளை மக்கள் மீறி செயற்படுவார்களாயின் கடுமையான சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டி ஏற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button