அரசியல்செய்திகள்

நாட்டை வீணடித்த ஐ.தே.க விற்கு மக்கள் மீண்டும் வாக்களிக்க மாட்டார்கள்..

ஐக்கிய தேசிய கட்சியின் இறுதிகாலம் முடிவடைந்துள்ள நிலையில் நாட்டை வீணடித்த ஐக்கிய தேசிய கட்சிக்கு மக்கள் மீண்டும் வாக்களிக்க மாட்டார்கள் என கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தாநந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். 

நாவலபிட்டியில் உள்ள தமது கட்சி காரியாலயத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார். 

நாங்கள் ஐக்கிய தேசிய கட்சிக்கு வேண்டிய வேட்பாளர்களை ஐனாதிபதி தேர்தலுக்கு நிறுத்துமாறு கூறுகிறோம். இதுவரையிலும் மலையகத்தில் உள்ள தொழிற்சங்கங்களை சார்ந்தவர்களும் வடகிழக்கில் உள்ளவர்களும் எம்மோடு கலந்துரையாடி தமக்கு ஆதரவு தருவதாக கூறியிருக்கிறார்கள் எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

தற்பொழுது நாட்டில் உள்ள பிரதான பிரச்சினைகள் தான் தேசிய பாதுகாப்பு நாட்டுக்கு தேவையான பாதுகாப்பு தலைவர், அதேபோல் நாட்டை கட்டியெழுப்பகூடிய தலைவர் மற்றும் ஒழுக்கத்தை பாதுகாக்க வேண்டிய ஒரு தலைவர். எனவே இந்த அனைத்து தகுதிகளும் எமது ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபாய ராஜபக்ஷவிற்கு இருக்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.

நாளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமைத்துவத்தை மஹிந்த ராஜபக்ஷ பொறுபேற்கும் நாள். ஆகையால் அனைத்து ஏற்பாடுகளும் தற்பொழுது ஏற்பாடு செய்யபட்டுள்ளது. அதேபோல் இந்த நாட்டின் எதிர்கால தலைவர் யார் என்பதை தீர்மானிக்க போகும் ஒரு முக்கியமான நாள். 2020 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை நாளைய தினம் மஹிந்த ராஜபக்ஷ அறிவிக்கவுள்ளார் எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்

Related Articles

Back to top button