...
நுவரெலியாமலையகம்

நானுஓயாவில் மற்றுமொரு சமையல் எரிவாயு கடத்தி, ரெகுலேட்டர் வெடிப்பு

நுவரெலியா – நானுஓயா நகரில் உள்ள மதுபானம் விற்பனை நிலையம் ஒன்றின் சமையல் அறையில் பயன்படுத்தப்பட்ட கேஸ் இன்று மதியம் வெடித்துள்ளது

எரிவாயுவை கடத்தும் ரெகுலேட்டர் பகுதியிலேயே இந்த வெடிப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த வெடிப்பு சம்பவத்தை அடுத்து கேஸ் சிலிண்டர் தரையில் விழுந்து புறண்டுள்ளது.

குறித்த கேஸ் சிலிண்டர் கவிழ்ந்ததால் அதிலிருந்த கேஸ் எரிவாயு அனைத்தும் சுமார் 15 நிமிடங்கள் வெளியேறியதாக மேற்படி நிலையத்தின் ஊழியர்கள் தெரிவித்தனர். கேஸ் சிலிண்டரை அடுப்புடன் இணைக்கும் போது இந்த வெடி சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் குறித்த கேஸ் நிறுவன அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக ஊழியர்கள் மேலும் தெரிவித்தனர்.

May be an image of indoor
May be an image of 1 person

Related Articles

Back to top button


Thubinail image
Screen