செய்திகள்

நானுஓயா இளைஞர் கழகத்திற்கு கடின பந்து உபகரணம் வழங்கப்பட்டது

நானுஓயா பிரதேச இளைஞர் கழகத்தின் நீண்ட நாள் தமது கழகத்திற்கு கடின பந்து
பயிற்சி உகரணங்கள் இல்லாமல் கிரிக்கட் போட்டிகளில் அடுத்த கட்டத்திற்கு செல்ல
முடியாமல் இருந்தனர்.

இந்த பிரச்சனை REHA STEEL உரிமையாளர் திருச்செல்வம் மற்றும் இலங்கை
தொழிலாளர் காங்கிஸின் கொட்டகலை பிரதேச சபை தவிசாளர், இளைஞர் அணி
பொதுச்செயலாளர் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

இதன் விளைவாக நேற்றைய
தினம் நானுஓயா காந்தி மண்டபத்தில் வைத்து மேற்படி இளைஞர் கழகத்திற்கு கடின
பந்து பயிற்சி பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் REHA
STEEL உரிமையாளர் திரு. திருச்செல்வம், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் கொட்டகலை
பிரதேச சபை தவிசாளர் திரு. ராஜமணி பிரஷாந்த், இளைஞர் அணி பொது செயலாளர் திரு.
அர்ஜுன் மற்றும் நுவரெலியா கிரிக்கட் சம்மேளத்தின் செயலாளர் திரு. ஜெகத்
ஜெயசேகர அவர்களும் கலந்துக்கொண்டனர்.

 எதிர்காலத்தில் சரியான திறமையை இந்த இளைஞர் கழகம் வெளிப்படுத்தினால் NPL
போட்டிகளுக்கு வீரர்கள் தெரிவு செய்யப்படுவார்கள் என உறுதியளிக்கப்பட்டது.

இளைஞர் கழகத்திற்கான மைதானமும் பெற்று கொடுப்பதற்கான நடவடிக்கை
எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com