நானுஓயா டெஸ்போட்டில் காணாமல் போன சிறுவன் – நீர்கொழும்பு புகையிரநிலையத்தில் கண்டுபிடிப்பு.

டி.சந்ரு
நானுஓயா டெஸ்போட் தோட்டத்தில் கடந்த 17ம் திகதி சனிக்கிழமை காலை 9 மணியலவில் கானாமல் போன 12வயதுடைய மகேந்திரன் ஆசான் என்ற சிறுவன் நேற்று இரவு நீர்கொழும்பு புகையிரத நிலையத்தில் வைத்து கண்டுபிடிக்க பட்டுள்ளதாக நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சிறுவனை அயல் வீட்டில் உள்ள நபர் ஒருவர் தொழில்பெற்று தருவதாகவும் குறித்த சிறுவனை வீட்டில் இருந்து 13000ம் ரூபாய் பணம் எடுத்து வருமாறு கூறிய நபர் அந்த சிறுவனிடம் இருந்து பத்தாயிரம் ரூபாய் பணத்தை பெற்று கொண்டு சிறுவனை நானுஓயா புகையிரத நிலையத்திற்கு அழைத்து சென்று பயனசீட்டினை பெற்று கொடுத்து நீர் கொழும்பிற்கு அனுப்பியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
கானமமல் போன சிறுவனை நீர்கொழும்பு புகையிரத நிலையத்தில் இனங்கண்ட உறவினர் ஒருவரே சிறுவனை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார் .
காணாமல் போன சிறுவன் நீர்கொழும்பு பகுதியில் இருப்பதாக நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தின் ஊடாக நானுஒய பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து சிறுவனை நீர்கொழும்பிற்கு அனுப்பி வைத்த சந்தேக நபரை கைது செய்வதற்கான நடவடிக்கையினை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.