நுவரெலியாமலையகம்

நானுஓயா -ரதல்ல குறுக்கு பாதையில் கனரக வாகனம் விபத்து ..

எம்பிலிபிட்டிய மித்தெனியவிலிருந்து போபத்தலாவ பண்ணைக்கு கோழி உணவுகள் கொண்டு சென்ற கனரக வாகனம் நானுஓயா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நானு ஓயா ரதல்ல குறுக்கு பாதையில் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனதால் பள்ளத்தில் விழுந்து பலத்த சேதமடைந்தது.

குறித்த விபத்து இன்று காலை (20/02) இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில் எவ்வித உயிர் சேதமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை நானு ஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
டீ.சந்ரு

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com