சமூகம்சிறப்பு

நானு ஓயா – உதவி பொலிஸ் பரிசோதகர் ரசிக்க மக்களின் மனங்களில் நீங்காத இடம் பிடித்துள்ளார்..

நானு ஓயா பொலிஸ் பிரிவில் SI ஆக பணியேற்று IP ஆக தன்னை பதவி உயர்த்தி கொண்டவர் IP ரசிக்க. இவர் தற்போது யாழ்ப்பாண பிரதேசத்திற்கு இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இவர் நானு ஓயா பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் காலத்தில் அப்பிரிவிற்கு உட்பட்ட அனைத்து தோட்ட மக்களிற்கும் அளப்பரிய உதவிகளை செய்துள்ளார்.

ஊர்மக்கள் அனைவரிடமும் சுமுகமாக பழகும் இவர் அப்பிரதேசத்திலுள்ள கல்வியை தொடர முடியாத பாடசாலை மாணவர்களுக்கு தன்னால் முடிந்த கல்விக்கான உதவிகளையும் ஏனையவர்களின் அனுசரணையும் பெற்றுக் கொடுத்து அம்மாணவர்களின் கல்விக்கு வழி சமைத்துள்ளார்.

இந்நிலையில் இவரது இடம்மாற்றத்தை மனதளவில் ஏற்றுக்கொள்ள முடியாத தோட்ட மக்கள் ஆழ்ந்த துயரத்தில் உள்ளனர்.

சந்ரு

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com