...
செய்திகள்

நான்காவது நாளகவும் தொடரும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கை

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் கடந்த திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை நான்காவது நாளாகவும் இன்றைய தினமும் தொடர்கின்றது. 

தமது பிரதான கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை தொழிற்சங்க நடவடிக்கையை கைவிடப் போவதில்லை என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

இது தொடர்பில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் கருத்து தெரிவிக்கையில் ,

விசேட வைத்தியர் நிபுணர்களுக்கான இடமாற்ற பட்டியல், தர வைத்தியர்களின் நியமனம் உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து கடந்த திங்களன்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் 5 மாவட்டங்களில் மாத்திரம் முன்னெடுக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை தற்போது நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பில் சுகாதார அமைச்சிடமிருந்து எவ்வித பிரதிபலிப்புக்களும் கிடைக்கப்பெறாத நிலையில், செவ்வாயன்று ஜனாதிபதியின் தலையீட்டுடன் சுகாதார அமைச்சின் செயலாளருடன் பேச்சுவார்த்தை ஏற்பாடு செய்யப்பட்டது. எவ்வாறிருப்பினும் இதன் போதும் இணக்கப்பாடுகள் எட்டப்படவில்லை. எனினும் எமது போராட்டம் வெற்றியளித்துள்ளதாகவே நாம் கருதுகின்றோம்.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கமானது நீண்ட காலமாக எவ்வித அரசியல் தலையீடுகளும் இன்றி , இடமாற்றுசபையின் ஊடாக வைத்தியர்களை உரிய இடங்களுக்கு நியமித்து வருகிறது. எனினும் கடந்த அரசாங்கத்தினால் இதில் குளறுபடிகள் ஏற்படுத்தப்பட்டன. எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வைத்தியர்களின் நியமனம் மற்றும் இடமாற்றத்தில் மாற்றங்களை செய்வதை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அனுமதிக்காது என்றார்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen