செய்திகள்
நான்கு மாடிக் கட்டிடத்திலிருந்து தவறி வீழ்ந்தவர் பலி

மருதானை, எஸ் மஹிந்த மாவத்தை பகுதியில் அமைந்துள்ள நான்கு மாடிடக் கட்டிடமொன்றில் இருந்து தவறி வீழந்த நபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் ஏறாவூரைச் சேர்ந்த 30 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த அடுக்குமாடி குடியிருப்பு பெண்கள் விடுதி எனவும், அனுமதியின்றி அடுக்குமாடி குடியிருப்பிற்குள் நுழைந்த நபர், பாதுகாவலர் ஓடி வருவதைக் கண்ட போது அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து கீழே விழுந்துள்ளதாக மருதானை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த நபரின் உடல் பிரேத பரிசோதனைகள் இன்று இடம்பெறவுள்ளது.