செய்திகள்

நான்கு வலயங்களின் கீழ் இன்று மின்வெட்டு!

இன்றும் (15) இரண்டு மணித்தியாலங்களுக்கு மேல் மின்சாரம் துண்டிக்கப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, 2 மணித்தியாலங்களும் 15 நிமிடங்களும் இன்று மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக சபை தெரிவித்துள்ளது.

நான்கு முக்கிய வலயங்களின் கீழ் மின்வெட்டு திட்டமிடப்பட்டுள்ளது.

F, G மற்றும் R வலயங்களில் காலை 08.30 மணி முதல் முற்பகல் 11.15 மணி வரை 2 மணி நேரம் 15 நிமிடம் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படும்.

H, I, J, S, T வலயங்களில் பிற்பகல் 03.00 மணி முதல் மாலை 05.45 மணி வரை 2 மணித்தியாலமும் 15 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

K, L, A, B, U, V, W வலயங்களில் மாலை 05.15 மணி முதல் இரவு 07.45 மணி வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.

மேலும், C, D, E, P, Q ஆகிய வலயங்களில் இரவு 07.30 மணி முதல் 10.15 மணி வரை 02 மணி 15 நிமிடங்களுக்கு மின்சாரம் தடைப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button