அரசியல்செய்திகள்

நாம் தற்போது தீர்மானமிக்க தருணத்தில் இருக்கின்றோம் – விஜயதாச

ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ ஜனாதிபதி தேர்தலில் தமது ஆதரவு கோட்டாபய ராஜபக்ஷவுக்கு என அறிவித்துள்ளார்.

இலங்கை மன்றக் கல்லூரியில் இன்று ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

நாம் தற்போது தீர்மானமிக்க தருணத்தில் இருக்கின்றோம்.
கடந்த நான்கரை வருடங்களில் நல்லாட்சி என்ற போர்வையின் கீழ் இருந்த அரசாங்கத்தில் சில பொறுப்புக்களில் இருந்த நபர் என்ற வகையில் நாடு எதிர்கொண்டுள்ள ஆபத்தில் இருந்து நாட்டை காப்பாற்ற, குடிமகன் என்ற வகையில் நாம் ஆதரவளிக்க வேண்டும்.
2015 ஜனவரி 08 நல்லாட்சி அரசாங்கத்தை அமைக்க நான் பாரியளவில் ஆதரவளித்தேன்.

அன்று ஜே.ஆர்.ஜயவர்தன ஏற்படுத்திய பிரிவினைவாத பயங்கரவாதத்தை இந்நாட்டின் முன்னாள் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிகள் நால்வரால் தீர்க்க முடியவில்லை.

உலகின் மிக மோசமான யுத்தத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க மஹிந்த ராஜபக்ஷ தலைமை தாங்கிய போது அதற்கு உதவியது கோட்டபய ராஜபக்ஷ தான்.

எவருடனும் அரசியல் பிரச்சினைகள் தனக்கு இல்லை . தான் அரசியலை சார்ந்து இல்லை .

தான் அரசியல் மூலம் வாழவில்லை .

மற்றைய பிரச்சினைகளுக்கு முன்னர் நாட்டினை பாதுகாத்துக் கொள்வதே தனக்கு மட்டுமின்றி நாட்டில் உள்ள அனைத்து நபர்களுக்கும் உள்ள கடமை மற்றும் பொறுப்பாகும்.

அதன் காரணமாக எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சரியான முடிவை எடுக்க வேண்டும், அதற்கான ஒரே தீர்வு கோட்டாபய ராஜபக்ஷவை இந்த தேர்தலில் வெற்றிப் பெறச் செய்வதே என பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button
image download