செய்திகள்

நாரஹேன்பிட்டி பகுதியில் வைத்தியசாலை ஒன்றிலிருந்து கைக்குண்டொன்று மீட்பு.

கொழும்பு, நாரஹேன்பிட்டி பகுதியிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றிலிருந்து கைக்குண்டொன்று மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

வைத்தியசாலையின் முதலாம் மாடியிலுள்ள கழிப்பறையொன்றிலிருந்தே இந்த கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மீட்கப்பட்ட கைக்குண்டை பாதுகாப்பாக அங்கிருந்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த நிலையில், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button