செய்திகள்

நாற்பதுக்கும் மேற்பட்ட தபால் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று

நாற்பதுக்கும் மேற்பட்ட தபால் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவிக்கிறது.

இதன் காரணமாக கொம்பனித்தெரு, பாணந்துறை, திருகோணமலை ஆகிய பகுதிகளின் பிரதான தபால் நிலையங்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதி தபால்மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.

கொரோனாத் நோயாளர்கள் அடையாளங் காணப்பட்டதையடுத்து 22 உப தபால் நிலையங்களும் மூடப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் தபால் சேவைகள் இடம்பெற மாட்டாது எனவும் பிரதிதபால் மாஅதிபர் மேலும் தெரிவித்தார்.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com