செய்திகள்

நாளாந்தம் சுமார் இருபதாயிரம் பி.சி.ஆர் பரிசோதனைகள்-சுகாதார அமைச்சு

நாளாந்தம் சுமார் இருபதாயிரம் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னர் நாளொன்றில் பத்தாயிரம் பி.சி.ஆர் பரிசோதனைகள் மாத்திரமே மேற்கொள்ளப்பட்டதாக சுகாதார சே​வைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

நாடு முழுவதும் 40 வைத்தியசாலைகளில் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் கூறினார்.

5 தனியார் வைத்தியசாலைகளிலும் பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இதேவேளை கேகாலை மற்றும் களுத்துறை வைத்தியசாலைகளில் பி.சி.ஆர் பரிசோதனை கூடத்தை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக சுகாதார சே​வைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன குறிப்பிட்டார்.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com