செய்திகள்

நாளாந்த பெற்றோல் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது !

நாளாந்த பெட்ரோல் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.அதற்கமைய, இன்றைய தினம் 1500 மெட்ரிக் தொன் பெட்ரோல் மாத்திரமே நாடளாவிய ரீதியில் பகிர்ந்தளிக்கப்படுவதாக பெட்ரோலிய மொத்த களஞ்சியசாலையின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

இதற்கு முன்னர் நாளாந்தம் 2500 மெட்ரிக் தொன் பெட்ரோல் விநியோகிக்கப்பட்டது.

எனினும், தற்போது பெட்ரால் தொகை குறைவடைந்து செல்வதால், வரையறைகளுக்கு உட்பட்டு அதனை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இன்றைய தினம் 5000 மெட்ரிக் தொன் டீசல் நாடளாவிய ரீதியில் பகிர்ந்தளிக்கப்படவுள்ளது.

டீசல் விநியோகம் எவ்வித சிக்கலுமின்றி முன்னெடுக்கப்படுவதாக பெட்ரோலிய மொத்த களஞ்சியசாலையின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, தனிநபர்கள் அல்லது நிறுவனத்திற்கு தேவைக்கு அதிகமான எரிபொருளை சேமித்து வைப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை கூறினார்.

Related Articles

Back to top button