செய்திகள்

நாளையும் விசேட டெங்கு ஒழிப்பு

கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை இடம்பெறவுள்ள மத்திய நிலையங்களை அண்டிய பகுதிகளில் இன்றும் நாளையும் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அனைத்து பரீட்சை மத்திய நிலையங்களை அண்டிய பகுதிகளில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

வரலாற்றில் அதிக மாணவர்கள் தோற்றும் கல்வி பொது தராதர சாதாரண தரப்பரீட்சை நாளை மறுதினம் ஆரம்பமாகி எதிர்வரும் 12 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

இம்முறை பரீட்சையில் 7 இலட்சத்து 17 ஆயிரம் பரீட்சார்த்திகள் தோற்றுவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பீ பூஜித தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button