Breaking Newsசெய்திகள்

நாளை இரவு முதல் மூன்று நாட்களுக்கு முழு நேர பயணக் கட்டுப்பாடு : இராணுவத் தளபதி வெளியிட்ட அதிரடி தீர்மானம்

நாளை இரவு 11 முதல் எதிர்வரும் 17 ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 4 மணி வரையில் நாடு முழுவதும் பயண தடை விதிக்கப்படுவதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா சற்றுமுன்னர் தெரிவித்தார்.

அதற்கமைய, குறித்த காலப்பகுதியினுள் அத்தியாவசிய சேவைகள் மற்றும் உணவுப் பொருள் விநியோக நடவடிக்கைகளுக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி மேலும் தெரிவித்தார். கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மேல் மாகாணத்தில் கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொள்பவர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, எதிர்வரும் 17ம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை இரவு 11 மணி தொடக்கம் அதிகாலை 4 மணி வரையில் நாடு பூராகவும் பயணத் தடை விதிக்கப்படுவதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com