நாளை அட்டனில் நடைபெறும் கூட்டு ஒப்பந்த கலந்துரையாடலுக்கு ஆயத்தமாகும் மலையக இளைஞர்கள்
கொழும்புவாழ் மலையக இளைஞர்களை,ஒருங்கிணைத்து மலையக சமூக ஆய்வு மையம் கடந்த மாதம் 29 ஆம் திகதி வௌ்ளவத்தையில் கூட்டு ஒப்பந்தம் தொடர்பாக கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தது.
இந்த கலந்துரையாடலில் மலையக சிவில் அமைப்புகள் ,மலையக இளைஞர்கள் இணைந்து கூட்டு ஒப்பந்தம் சம்பந்தமாக பல விடயங்களை கலந்துரையாடியிருந்தனர்.
இந்நிலையில், கூட்டொப்பந்தம் தொடர்பான மலையக சமூக ஆய்வு மையத்தின் மற்றுமொரு கலந்துரையாடல் அட்டனில் நாளை சனிக்கிழமை (09) காலை 10 மணிக்கு வெஸ்டர் சர்வதேச பாடசாலை மண்டபத்தில் இடம்பெறவுள்ளதாக அதன் ஏற்பட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சிவில் அமைப்புகள் மற்றும் மலையக சமூக ஆர்வலர்கள் அரசியல் சாரா நண்பர்கள் அனைவரையும் அட்டனில் நடைபெற உள்ள கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்துக்கொள்ள மலையக சமூக ஆய்வு மையம் அழைப்பு விடுத்துள்ளது.
மேலும் இக்கலந்துரையாடல் குறித்த தகவல்களுக்கு 0766870891, 0729815534 என்ற தொலைபேசி இலக்கங்கள் மூலம் தொடர்புக்கொள்ள முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.