நாளை பாடசாலைகள், கல்வி அலுவலகங்களில் நாடுதழுவிய ரீதியில் பணிப்பகிஸ்கரிப்பு.

இலங்கை கல்வித்துறையில் – அரசியல் பழிவாங்கல் நியமனம் எனும் போர்வையில் தகுதியற்றவர்களுக்கு 1200க்கும் அதிகமான நியமனங்கள் வழங்கப்படவுள்ளது. பிரமாணக்குறிப்புகளை மீறி வழங்கப்படும் இந்த அரசியல் ரீதியான நியமனங்கள் கல்வித்துறையை சீரழிக்கும் செயற்பாடாகும்.
இத்தகைய நியமனங்களை எதிர்த்து – இலங்கைகல்வி நிர்வாக சேவை சங்கம், அதிபர் சங்கங்கள், ஆசிரியர் சங்கங்கள் என 16 தொழிற்சங்கங்கள் இணைந்து நாளை 4 ஆம் திகதி புதன்கிழமை நாடுதழுவிய ரீதியில் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்தார்.
இப்பகிஸ்கரிப்பு வடமாகாணத்திலும் நடைபெறவுள்ளது. அன்றைய தினம் மத்திய கல்வியமைச்சின் முன்னால் பாரிய ஆர்ப்பாட்டமும் நடைபெறவுள்ள அதே நேரம் கொழும்பு கல்வி அமைச்சிக்கு முன்பாகவும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது .குறித்த ஆர்பாட்டதில் பங்குபெற முடியாதவர்கள் சுகயீனவிடுமுறை அறிவித்து பணிபகிஸ்கரிப்பு செய்யுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும்
இதன் மூலம் கல்வித்துறையில் ஏற்படவுள்ள ஆபத்தைத் தவிர்க்க சமூகப்பொறுப்புடன் நாம் செயற்படுகின்ற அதே வேலை முறையற்ற நியமனங்கள் – எதிர்கால சமூகத்துக்கு ஆபத்தானவை என்பதை உணர்ந்து – அன்றைய நாளில் பாடசாலைகளுக்கு மாணவர்களை அனுப்பாது – மாணவர்களின் பாதுகாப்பு ஏற்பாடுகளை பெற்றோர்கள் மேற்கொண்டு ஒத்துழைக்குமாறும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் அழைப்புவிடுத்துள்ளார்.